இந்தியாவில் பஜாஜ் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பி.எஸ்.6 மாடல்கள் வெளியானது

 

இந்தியாவில் பஜாஜ் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பி.எஸ்.6 மாடல்கள் வெளியானது

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பி.எஸ்.6 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லி: இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பி.எஸ்.6 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பி.எஸ் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகம் ஆகிக் கொண்ட இருக்கின்றன. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பைக்குகளின் பி.எஸ்.6 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய சி.டி.100 விலை ரூ. 40,794 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் புதிய பிளாட்டினா பைக்கின் விலை ரூ. 47,264 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ttn

இவ்விரு புதிய பைக் மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் பயன்பாட்டை சிறப்பாக கையாளும் திறன் கொண்டதாகும். இந்த புதிய எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை பராமரிப்பது எளிதாக இருக்கும் கூறப்படுகிறது. மேலும் புதிய பஜாஜ் சி.டி.100 பைக்கை பொறுத்தவரை 100 சிசி மற்றும் 110சிசி என்று இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சி.டி.110 மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல், புதிய கடாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய பிளாட்டினா பைக்குகளும் 100சிசி மற்றும் 110சிசி ஹெச் கியர் என்று இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 110சிசி மாடல் விலை ரூ. 54,797 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.6 என்ஜின் கொண்ட பைக்குகளிலேயே மிக விலை குறைந்த பைக்காக புதிய சி.டி.100 திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.