இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நமக்கு அபாயம் தான் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

 

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நமக்கு அபாயம் தான் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

தேர்தலுக்கு முன்பு இந்தியா மீண்டும் நம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு இந்தியா மீண்டும் நம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

புல்வாமா தாக்குதல் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.நாடு முழுவதும் இச்சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

புல்வாமா தாக்குதல்

புவ்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  இந்த அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது என்பதால் அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா விமானப்படை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை சிதைத்தது.

இந்திய ராணுவம்

நாளிதழ் செய்தி 

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக ஒரு செய்தியை அந்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியே தான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக மீண்டும் நரேந்திர மோடி நிர்வாகம் (மத்திய அரசு) நம்மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.” என்று இம்ரான் கான் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க 

ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது

புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா உதவியா ? – இந்தியப் புலனாய்வுத் துறை விசாரணை