இந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா கொண்ட இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

இந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா கொண்ட இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இன்டெக்ஸ் நிறுவனத்தின் இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இன்டெக்ஸ் நிறுவனத்தின் இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் தனது ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 8 எம்.பி மற்றும் 2 எம்.பி செல்ஃபி கேமரா யூனிட் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 8 எம்.பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமரா யூனிட்களிலும் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே

– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

– 2 ஜிபி ரேம்

– 16 ஜிபி மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்

– டூயல் சிம் ஸ்லாட்

– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. + 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 2400 எம்.ஏ.ஹெச் பேட்டரி

இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் இந்த மாடலின் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.