இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

 

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க கொத்துக்கொத்தாக மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க கொத்துக்கொத்தாக மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இத்தாலி நாடு இந்த  வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி வருகின்றன. இந்தியாவில் 332 பேருக்கும் தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ்

இந்நிலையில்  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பால் 63 வயடு முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுவந்த பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 38 வயதான நபர் உயிரிழந்தார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.