இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரிப்பு!

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரிப்பு!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 24லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 24லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

coronavirus

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 559 பேர் உயிரிழந்த நிலையில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.