இந்தியாவில் குறைந்த விலையில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஹெல்மெட்…

 

இந்தியாவில் குறைந்த விலையில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஹெல்மெட்…

SBA-1 HF என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டை இந்தியாவின் ஸ்டீல்பேர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த ஹெல்மெட்டின் பின் பகுதியில், 2 டிவைஸ்கள் உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட தலைக்கவசம் இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், அதனால்தான் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறும் இளைஞர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Helmet

SBA-1 HF என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டை இந்தியாவின் ஸ்டீல்பேர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த ஹெல்மெட்டின் பின் பகுதியில், 2 டிவைஸ்கள் உள்ளது. இது ஹெல்மெட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. டூவீலர்களில் பயணிக்கும்போது, செல்போனில் பேச முடியவில்லை பாடல்களை கேட்க முடிவதில்லை என கேட்போருக்கு பிரத்யேக வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Helmet

இந்த ஹெல்மெட்டில் இடம்பெற்றிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால்  செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கலாம். இரண்டாவதாக இந்த ஹெல்மெட்டில் Water Proof வசதி உள்ளது சிறப்பம்சம் ஆகும். இதில் உள்ள ஹேண்ட்ஸ் ஃப்ரீ பாகங்களை பாதுகாக்க IP5 Water Resistant வசதி வழங்கப்பட்டுள்ளது.  3 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹெல்மெட் 60 செமீ வரையிலான அளவில் உள்ளது.

Helmet

இந்த ஹெல்மெட்டில், சாலையில் ஏற்படும் இரைச்சலை நீக்கும் வசதி இல்லை.. எனவே சாலையில் ஏற்படும் சப்தங்களை கேட்டு கொண்டு அதற்கு ஏற்ப வாகனங்களை இயக்க முடியும். இந்த தலைக்கவசத்தின் விலை 2,589 ரூபாய் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இதை விட குறைவான விலைக்கு வாங்க முடியும் என கூறப்படுகிறது.