இந்தியாவில் எம்.ஐ டிவி, ரெட்மி ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ பவர் பேங்க் அதிரடி விலை உயர்வு…என்ன காரணம்?

 

இந்தியாவில் எம்.ஐ டிவி, ரெட்மி ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ பவர் பேங்க் அதிரடி விலை உயர்வு…என்ன காரணம்?

ரெட்மி ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ டிவி உட்பட குறிப்பிட்ட சியோமி நிறுவன சாதனங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி: ரெட்மி ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ டிவி உட்பட குறிப்பிட்ட சியோமி நிறுவன சாதனங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு எந்தளவு வரவேற்பும், பாராட்டும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரெட்மி 6 மற்றும் 6A ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ டிவி 4A ப்ரோ 49 மற்றும் 4C ப்ரோ 32, எம்.ஐ பவர் பேங்க் 2i பிளாக் ஆகிய சாதனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

mi

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்ததை காட்டிலும், 15 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த விலையேற்றம் அவசியமாகிறது என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதிய விலை விவரம்:

ரெட்மி 6A (2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி) – ரூ.6,599 (ரூ.600 விலை உயர்வு)

ரெட்மி 6A (2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி) ரூ.7,499 (ரூ.500 விலை உயர்வு)

ரெட்மி 6 (3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி) ரூ.8,499 (ரூ.500 விலை உயர்வு)

எம்.ஐ டிவி 4A ப்ரோ 49ரூ.31,999 (ரூ.2000 விலை உயர்வு)

எம்.ஐ டிவி 4C ப்ரோ 32 ரூ.15,999 (ரூ.1000 விலை உயர்வு)

எம்.ஐ பவர் பேங்க் 2i பிளாக் ரூ.899 (ரூ.100 விலை உயர்வு)

இந்த புதிய விலை நாளை முதல் (நவ.11) அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.