இந்தியாவிலேயே முதன்முறை! சன்ரூஃப் மாநகரப் பேருந்து, பொள்ளாச்சியில்!

 

இந்தியாவிலேயே முதன்முறை! சன்ரூஃப் மாநகரப் பேருந்து, பொள்ளாச்சியில்!

அடடா, ஜன்னலோரமே இவ்வளவு அருமையான காற்று அடிக்கிறதே, பெங்களூருவில் மாடி பஸ்ஸில் மேல்மாடி காலியாக இருப்பதைப்போல, இந்த பேருந்துக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என பயணிகள் நினைத்தது, பேருந்து ஓட்டுநருக்கு கேட்டுவிட்டது போல. ஒரு ஸ்விட்சை தட்டுகிறார். பயணிகளுக்கு ஆச்சர்யம். பேருந்தின் மேலே இருந்த கூரை, மாயமாக மறைகிறது.

கோவை போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு மாநகரப் பேருந்து ஒன்று வடக்கிப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவம் துவங்கியதன் அறிகுறியாக, அருமையான காற்று உள்ளே அமர்ந்து இருந்த 20 பயணிகளையும் சொக்க வைக்கிறது. அடடா, ஜன்னலோரமே இவ்வளவு அருமையான காற்று அடிக்கிறதே, பெங்களூருவில் மாடி பஸ்ஸில் மேல்மாடி காலியாக இருப்பதைப்போல, இந்த பேருந்துக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என பயணிகள் நினைத்தது, பேருந்து ஓட்டுநருக்கு கேட்டுவிட்டது போல. ஒரு ஸ்விட்சை தட்டுகிறார். பயணிகளுக்கு ஆச்சர்யம். பேருந்தின் மேலே இருந்த கூரை, மாயமாக மறைகிறது. பயணிகளுக்கு ஒரே ஆச்சர்யம். அடடா, எடப்பாடியாரின் சாதனையே சாதனை என ஒவ்வொருவரும் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கும்போதே பேருந்து திடீரென நின்றுவிடுகிறது. ஓட்டுநரும் நடத்துனரும் கீழே இறங்கி ஓடுகிறார்கள். ஓஹோ, செல்ஃபி எடுக்கப்போகிறார்கள் போல என பயணிகள் நினைக்கும்போதுதான், அவர்களுக்கு உரைக்கிறது அத்தனையும் கனவென்று.

Pollachi Bus

TN 38 N 2769 என்ற ரெஜிஸ்ட்ரேஷனுடன் கூடிய அந்த பேருந்தின் கூரை, காற்று அடித்த வேகத்திற்கு தாங்காமல் தனியாக பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது. அரசுப்பேருந்தின் மேற்கூரைய் காற்றில் பறந்து அரசின் மானம் கப்பலேறியதில், கவனிக்க வேண்டியவை இரண்டு முக்கியமான நிகழ்வுகள். 
1. மேற்கண்ட இந்தப் பேருந்து F.C. முடித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. 
2. சில நாட்களுக்கு முன்பு மேற்கண்ட பேருந்தின் அவல நிலையை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவுசெய்த ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்ப்ட்டது.

எடப்பாடியார் நாமம் வாழ்க‌! பன்னீர் புகழ் ஓங்குக!