இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீங்க….. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு பதிலடி கொடுத்த இந்தியா….

 

இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீங்க….. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு பதிலடி கொடுத்த இந்தியா….

இந்தியாவின் உள்விவகாரங்கள் (டெல்லி கலவரம்) குறித்து பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீங்க என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கடந்த சில தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் சர்வதேச மத சுதந்திரத்துகான அமெரிக்க ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கருத்து தெரிவித்து இருந்தன. சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகையில், டெல்லி கலவரம் கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்திய மற்றும் பயங்கரமான வன்முறையை கண்டிக்கிறோம். வன்முறையின் விளைவாக உயிரிழப்பு மற்றம் அப்பாவி மக்கள் படுகாயம் மற்றும் மசூதிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு தீ வைப்பு மற்றும் நாசமாக்கப்பட்டன என தெரிவித்தது.

ஓ.ஐ.சி.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், டில்லி கலவரம் தொடர்பாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம், மீடியாவின் குறிப்பிட்ட பிரிவு மற்றும் சில தனிப்பட்ட நபர்கள் கருத்துக்கள் தெரிவித்ததை நாம் பார்த்தோம். அவை முற்றிலும் தவறானவை, தவறாகவழித்நடத்தும் மற்றும் பிரச்சினையை அரசியலாக்குவதை நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

யு.எஸ்.சி.ஆர்.ஐ.எப்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு வெளியிட்ட அறிக்கைகளும் முற்றிலும் தவறானவை, குறிப்பிட்டவை மற்றம் தவறாகவழித்நடத்தும். வன்முறையை தவிர்க்கவும், நம்பிக்கை மற்றும் இயல்புநிலையை மீட்டமைக்கவும் எங்களது சட்ட அமலாக்க அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. அரசின் மூத்த பிரதிநிதிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்காக பிரதமர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முக்கியமான இந்த நேரத்தில் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடாதீங்க என நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.