இந்தியாமீது தாக்குதல் நடத்த ஏதுவாக மசூத் ஆசாரை விடுவித்தது பாகிஸ்தான்!

 

இந்தியாமீது தாக்குதல் நடத்த ஏதுவாக மசூத் ஆசாரை விடுவித்தது பாகிஸ்தான்!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடுதான் மசூத் ஆசார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் படை பலத்தை அதிகரித்து வருவதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் ஆசாரை கடந்த மே மாதம் ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதியாக அடையாளப்படுத்தியது. அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இம்ரான்கான், அங்கிருந்து கேள்விகள் வரும் என்பதால், மசூத் ஆசாரை சிறையில் தள்ளுவதுபோல் தள்ளி நாடகமாடிவிட்டு அமெரிக்கா சென்றார். தற்போது காஷ்மீரில் தங்கள் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அரசுக்கு மறைமுகமாக உணர்த்தவே, சத்தமில்லாமல் மசூத் ஆசாரை பாகிஸ்தான் அரசாங்கம் விடுதலை செய்திருக்கிறது. விடுதலையானதும் மசூத் ஆசார் என்ன செய்வான்? வேறென்ன செய்வான், இந்தியாவில் கலவரத்தை உண்டுபண்ண குண்டுவைக்க திட்டம்போடுவான்.
 

Pak planning major attack on India

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடுதான் மசூத் ஆசார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் படை பலத்தை அதிகரித்து வருவதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஜம்மு – ராஜஸ்தான் செக்டார் மற்றும் சியால்கோட் இடையேயான எல்லைப்பகுதியில் விரைவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் வீரர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ’இந்தியாவுக்கு முழு பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாகிஸ்தான் பிரதமரும், ’காஷ்மீருக்காக எதையும் தியாகம் செய்யத் தயார்’ என பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், உளவுத்துறை எச்சரிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது.