இந்தியர்களின் பணத்தை திருடும் அரசு… நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் தாக்கு

 

இந்தியர்களின் பணத்தை திருடும் அரசு… நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் தாக்கு

பெட்ரோல் விலையை தினமும் உயர்த்துவதன் மூலம் இந்திய மக்களின் பணத்தை மத்திய அரசு திருடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தினமும் குறைந்துகொண்டே செல்கிறது.

பெட்ரோல் விலையை தினமும் உயர்த்துவதன் மூலம் இந்திய மக்களின் பணத்தை மத்திய அரசு திருடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தினமும் குறைந்துகொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை இஷ்டத்துக்கும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் தற்போது விலையைக் குறைக்க மறுத்து வருகின்றன. இது பற்றி எதிர்க்கட்சிகள் காட்டுக்கத்தல் கத்தினாலும் விலை குறைப்பு பற்றி மத்திய பா.ஜ.க அரசு வாய் திறக்க மறுத்து வருகிறது.

 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, “உலகளவில் கச்சா எண்ணெய் விலை  50% குறைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு தினம்தோறும் அதிகரித்து, உழைக்கும்  சாமானிய மக்களின், இந்தியக் குடி மக்களின் பணத்தை வெளிப்படையாக கொள்ளை அடிக்கிறது, இது அராஜகத்தின் உச்சக்கட்டம். எரிபொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்” என்றார். உடனடியாக அவரது மைக் அணைக்கப்பட்டது. அவர் தொடர்ந்து பேச விடாமல் தடுக்கப்பட்டார்.
தயாநிதிமாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்க மறுத்ததைக் கண்டித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு மட்டுமல்ல… பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு பதில் சொல்லாத போக்கே மத்திய அரசிடம் உள்ளது.