இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வாலின் கேரக்டர் என்ன தெரியுமா?

 

இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வாலின் கேரக்டர் என்ன தெரியுமா?

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

indian 2

இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும்  போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியைப்  படமாக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. 

kajal

இந்நிலையில் நடிகை  காஜல் அகர்வால் கதாபாத்திரம்  குறித்த செய்தி கசிந்துள்ளது. இந்தியன் 2 படத்தில்  90 வயது முதியவர் சேனாபதிக்கு  மனைவியாக 85 வயது அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக  முதல் பாகத்தில் கமல்ஹாசன் மனைவியாக வயதான கதாபாத்திரத்தில்  சுகன்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.