இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்!

 

இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்!

வானொலி தொகுப்பாளராக இருந்து நடிகரான ஆர்.ஜே. பாலாஜி  ‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வானொலி தொகுப்பாளராக இருந்து நடிகரான ஆர்.ஜே. பாலாஜி  ‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   

RJ Balaji

இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜியும் நடிக்கவிருந்தார். இந்நிலையில் அவர் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது