இத்தாலியிலிருந்து வந்த சோனியா, ராகுல் காந்திக்கு கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்… பா.ஜ.க எம்.பி. பேச்சு… கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்….

 

இத்தாலியிலிருந்து வந்த சோனியா, ராகுல் காந்திக்கு கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்… பா.ஜ.க எம்.பி. பேச்சு…  கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்….

நாடாளுமன்ற மக்களவையில், அண்மையில் இத்தாலி சென்று வந்த திரும்பி வந்த சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடுமையாக கொந்தளித்தனர்.

சீனாவை தொடர்ந்து மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் சுமார் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா வந்துள்ள இத்தாலியை சேர்ந்த 15 சுற்றுலா பயணிகளும் அடங்குவர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹனுமான் பெனிவால்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பா.ஜ.க. எம்.பி. ஹனுமான் பெனிவால் பேசுகையில், அண்மையில் இத்தாலி சென்று திரும்பி வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் அது பரவலாம் என தெரிவித்தார். ஆனால் ஹனுமான் பெனிவாலின் கருத்துக்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் சீற்றம் கொண்டனர். மேலும் ஹனுமான் பெனிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினையால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

ரமேஷ் பிதுரி

மற்றொரு பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், 6 நாட்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி இத்தாலியிருந்து திரும்பி வந்தார், ஆகையால் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.  ராகுல் காந்திக்கு அருகில் உள்ள எம்.பி.களுக்கும் கொரோனா வைரஸ் பரவலாம். இத்தாலியிருந்து வந்த ரொம்ப பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை (ராகுல் காந்தி) மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.