இத்தனை நாளா எங்கேம்மா இருந்தீங்க…ஹீரோயினாகக் களம் இறங்கிய ஜீ.வி.பிரகாஷின் தங்கை…

இத்தனை நாளா எங்கேம்மா இருந்தீங்க…ஹீரோயினாகக் களம் இறங்கிய ஜீ.வி.பிரகாஷின் தங்கை…

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஆச்சர்ய வரவாக ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து ஒரு ஸ்வீட் ஹீரோயின் அறிமுகமாகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல…பிரபல இசையமைப்பாளரும், பிசி நாயகனுமாகிய ஜீ.வி.பிரகாஷின் தங்கையாவார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது அதிகப்படங்களில் நடிக்கும் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். ஏராளமான படங்களில் பிசியாக  நடித்து வரும் நிலையிலும் இசையமைக்கும் பணிகளுக்கும் கேப் விடாமல் ஜி.வி.பிரகாஷ் குமார், தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையும் அமைக்கிறார்.

GV

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் எண்டராகிறார். அதுவும் ஹீரோயினாக. ஆம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வந்த பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி நடிக்கும் ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஹீரோயினாக நடிக்க, பவானி ஸ்ரீ இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறாராம்.

gv

 பவானி ஸ்ரீ இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “க/பெ.ரணசிங்கம் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும், அந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.அந்த ட்வீட்டை எடுத்து தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் பவானி ஸ்ரீக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.