இதை செய்யுங்க.. அப்புறம் குழந்தைகளின் ஞாபக சக்தியைப் பாருங்க!

 

இதை செய்யுங்க.. அப்புறம் குழந்தைகளின் ஞாபக சக்தியைப் பாருங்க!

இளம் வயதிலேயே ஞாபக சக்தி குறைபாட்டை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயதான பின் காலம் முழுவதும் ஞாபக சக்தி குறைபாட்டால் பிரச்சனை தான்.. ஒரு முறை, இதுவரைக்கும் நீங்கள்,  உங்கள் ஞாபக மறதியால், மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதை நினைத்துப் பாருங்க! தவிர, இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்றே எல்லா பெற்றோர்களும் நினைக்கிறார்கள்.

இதை செய்யுங்க.. அப்புறம் குழந்தைகளின் ஞாபக சக்தியைப் பாருங்க!

இளம் வயதிலேயே ஞாபக சக்தி குறைபாட்டை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயதான பின் காலம் முழுவதும் ஞாபக சக்தி குறைபாட்டால் பிரச்சனை தான்.. ஒரு முறை, இதுவரைக்கும் நீங்கள்,  உங்கள் ஞாபக மறதியால், மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதை நினைத்துப் பாருங்க! தவிர, இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்றே எல்லா பெற்றோர்களும் நினைக்கிறார்கள்.  இதனால் பிறந்து ஒருவருடம் முடிந்தவுடனே குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  ஓடி விளையாட வேண்டிய வயதில் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தைத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளைத் தான் தற்போது பல பெற்றோர்களும் செய்து வருகிறார்கள்.

child

இன்றைய குழந்தைகளும் ஓடி விளையாடுவது எல்லாம் கிடையாது. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து, தொலைக்காட்சியையும், வீடியோ விளையாட்டு, கம்ப்யூட்டர் என்று சொகுசு பழகி, சோம்பேறியாக உருவாகி வருகிறார்கள். இவை எல்லாமே குழந்தைகளின் மனதிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகத் தான் இருக்கின்றன. எல்லா பெற்றோர்களும் பள்ளியில் தங்கள் குழந்தைகள் முதல் மார்க் வாங்கவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அதிக பாடச் சுமைகளைக் கொடுக்கிறார்கள். வகுப்பில் இருக்கும் அத்தனைக் குழந்தைகளுமே எப்படி முதல் மதிப்பெண் வாங்க முடியும்?
இத்தகைய காரணங்களால் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து மனமும் சோர்ந்து காணப்படுவார்கள்.  இந்நிலையில் குழந்தைகளுக்கு ஞாபக மறதி உண்டாகிறது.  இத்தகைய மறதிக்கு, உளவியல் காரணத்தோடு, இரும்புச்சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.  குழந்தைகளுக்கு ஏற்படும் இக்குறையைப் போக்க ஒரு எளிய மருத்துவம் இருக்கிறது.  

வல்லாரைக்கீரை    – 1 கைப்பிடி
ஆரைக்கீரை        – 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
சீரகம்        – 1 ஸ்பூன்
சோம்பு        – 1 ஸ்பூன்
மிளகு        – 5
சின்ன வெங்காயம்    – 5
பூண்டுப்பல்        – 2
இவற்றை ஒன்றாக எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும்.  இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும். மேலும், வல்லாரை இலையை காய வைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்து வந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும்.