இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல- ராகுல் லகலகலக

 

இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல- ராகுல் லகலகலக

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை.

rahul

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது உறுதி.

rahul

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார்.

rahul

பின்னர் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட அங்கு சென்றார்.
ராகுல், இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆட இந்தியா ஏ அணியில் இணைந்தார். பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த விவகாரத்துக்குப் பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா ஏ அணியில் இணைந்தது, அவருக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருக்கும்.

rahul

தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவந்த ராகுல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் முதல் பந்திலேயே போல்டாகி கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ராகுலின் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 7 மாதங்களாக ராகுல் சரியாக ஆடவில்லை. அவர் இன்னும் ஃபார்முக்கு திரும்பாதது, உலக கோப்பையில் அவரது இடம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

rahul

இந்நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா ஏ வென்றபிறகு, இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேஎல் ராகுல் குறித்து பேசினார். அப்போது, முதல் பந்தே ராகுலுக்கு அபாரமான பந்தாக வந்தது. அதனால் முதல் பந்திலேயே அவுட்டும் ஆகிவிட்டார். ஆனாலும் அவரது ஆட்டத் தரத்தின் மீதும் திறமையின் மீதும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியிலும் ராகுல் ஆடுகிறார்.

ராகுல் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார். மூன்று விதமான போட்டிகளிலும் சதமடித்த பெருமையையும் பெற்றுள்ளார். நிறைய பேட்ஸ்மேன்கள் இதை செய்ததில்லை. அவரது திறமையை ஏற்கனவே அவர் நிரூபித்துள்ளார். அதனால் அவரது தற்போதைய மோசமான ஃபார்ம் எனக்கு பெரிய விஷயமாகவே படவில்லை என்று ராகுல் டிராவிட் அதிரடியாக தெரிவித்துள்ளார்.