இது தலைவர் குத்து: மரண மாஸ் ‘பேட்ட’ பாடலின் ஸ்னீக் பீக் ரிலீஸ்!

 

இது தலைவர் குத்து: மரண மாஸ் ‘பேட்ட’ பாடலின் ஸ்னீக் பீக் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடலின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடலின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘மரண மாஸ்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு தீனிப்போடும் வகையில் இப்பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இப்பாடலுக்கு ‘இது தலைவர் குத்து’ என ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த நிலையில், பக்கவான மாஸ் கிளப்பும் குத்துப்பாடலாக இந்த பாடல் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தின் அறிமுக பாடலை பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடியுள்ளார். இந்த பாடலை ‘மெர்சல்’ பாடலாசிரியரான விவேக் வரிகளை எழுதியுள்ளார்.

மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படத்தின் ‘மரண மாஸ்’ பாடலுக்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். அதிகபட்ச எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் ‘பொங்கல்’ பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.