இது சினிமா வசனம் அல்ல, என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான்: கமல் நெகிழ்ச்சி பேச்சு!

 

இது சினிமா வசனம் அல்ல, என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான்: கமல் நெகிழ்ச்சி பேச்சு!

என் எஞ்சிய வாழ்க்கையை மக்களுக்காகச் செலவிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்  தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி: என் எஞ்சிய வாழ்க்கையை மக்களுக்காகச் செலவிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்  தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்திற்கென தனி தேர்தல் அறிக்கை  

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, மக்களவை தேர்தலில் முதன்முறையாகக் களம் காணவுள்ள கமல் ஹாசன் புதுச்சேரி மாநிலத்திற்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். புதுச்சேரி  ஏஎஃப்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

என் விரோதிகள் தான் காரணம் ? 

kamal

அப்போது பேசிய கமல் ஹாசன், நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார்கள் மூன்றே மாதத்தில் வந்துவிட்டேன். கிராமங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றார்கள் என் பயணத்தை அங்கிருந்து தான் தொடங்கினேன். எங்களுக்கு  யோசனை கூறுவதே எங்களின்  விரோதிகள் தான். அவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த யோசனையெல்லாம் வந்திருக்காது’ என்றார்.

இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்

kamal

‘சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்ட, உங்களின் விரலில் மை வைக்க வேண்டும். நாங்கள்  தனித்துவமாகத் தெரியவே தனித்துப் போட்டியிடுகிறோம். மற்றவர்கள் எல்லாம் சபரிமலைக்குச் செல்லும் போது  யானை கூட்டத்திற்குப் பயந்து கூட்டமாகச் செல்வார்களே  அப்படிச் சென்று கொண்டிருக்கின்றனர். அது சேராத கூட்டம்,கூடியவுடன் களைந்து விடும் கூட்டம். ஆனால்  நாங்கள்  சங்கமம்.  தமிழக அரசியல் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என்னைப் புகழின் உச்சியில் வைத்த, மக்களுக்கு நான்  என்ன செய்துள்ளேன் என்ற குற்றவுணர்வு தான் என்னை இங்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இது தாமதம் தான், ஆனாலும் மக்களுக்காக நான் வந்துள்ளேன். நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்’ என்று உணர்ச்சி பொங்கப்  பேசியுள்ளார் கமல் ஹாசன். 

இதையும் வாசிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: முதல்வரின் வாகனத்தை நோக்கி பறந்து வந்த செருப்பு; தஞ்சாவூரில் பரபரப்பு!