‘இது எனக்கு கிடைத்தது பரிசு அல்ல வரம்’: நடிகர் விவேக் நெகிழ்ச்சி!

 

‘இது எனக்கு கிடைத்தது பரிசு அல்ல வரம்’: நடிகர் விவேக் நெகிழ்ச்சி!

பல சமூக கருத்துக்களைத் தனது நகைச்சுவை உணர்வோடு சொல்லி சின்ன கலைவாணர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இயக்குநர்  சிகரம் கே. பாலச்சந்தரின்  இயக்கத்தில் வெளியான  மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். இதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தது மட்டுமில்லாது பல சமூக கருத்துக்களைத் தனது நகைச்சுவை உணர்வோடு சொல்லி சின்ன கலைவாணர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

vivek

இதையடுத்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை  பின்பற்றி வரும் இவர்  மரம் நடுதல்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு லட்சக்கணக்கான மரங்களையும் நட்டு சாதனை படைத்துள்ளார். 

vivek

இந்நிலையில் நடிகர் விவேக் சமீபத்தில்  இயக்குநர் கே. பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு பாலசந்தர் பயன்படுத்தி வந்த பேனாவை அவர் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது … பரிசு அல்ல… வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.