இது இந்துக்களையும் பாதிக்கும்…… தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு கருப்பு கொடி காட்டும் உத்தவ் தாக்கரே….

 

இது இந்துக்களையும் பாதிக்கும்…… தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு கருப்பு கொடி காட்டும் உத்தவ் தாக்கரே….

இந்துக்களையும் பாதிக்கும் என்பதால் தேசிய குடிமக்கள் பதிவேடுவை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே பேட்டி ஒன்றில் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேட்டை மகாராஷ்டிராவில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஆதரிப்போம். அது எந்தவொரு குடிமக்களின் குடியுரிமை பறிக்காது. அனைத்து குடிமகன்களும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இந்த சட்டம் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்தாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு
முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இதே நிலைப்பாட்டை இந்துக்களும் எடுத்தால் என்ன செய்வது?. அசாமில் நிகழ்ந்தது போல், இந்துக்களின் அடிப்படை தேசிய குடிமக்கள் பதிவேடு கேள்வி கேட்கும். அசாமில் 19 லட்சம் இந்துக்களில் 14 லட்சம் பேர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள்.

சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

தேசிய குடிமக்கள் பதிவேட்டால் இந்துக்கள் பாதிக்கபடுவர்.  தேசிய குடிமக்கள் பதிவேடு இன்னும் வரவில்லை. அதனால் அதனை எதிர்த்து போராடுவது அல்லது ஆதரிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள சிவ சேனா குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.