இதுவரை 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் இல்லை… மத்திய அமைச்சர் தகவல்…

 

இதுவரை 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் இல்லை… மத்திய அமைச்சர் தகவல்…

நம் நாட்டில் இதுவரை 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நுழையவில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் இதுவரை சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நுழையவில்லை. எங்களால் கொரோனா வைரஸ் எங்கு உள்ளது என்பதை சுட்டி காட்ட முடிந்தது. இந்தியாவில் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு கோவிட்-19 தொற்றை எப்படி கையாளுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

கொரோனா வைரஸ்

சீனாவில் கடந்த ஜனவரி 7ம் தேதியன்று முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்ட செய்திக்கு பதிலளித்த உலகின் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜனவரி 8ம் தேதியன்று நமது நிபுணர்கள் குழுவை கூட்டி கோவிட்19 தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டோம் மேலும் ஜனவரி 17ம் தேதியன்று இது தொடர்பான சுகாதார அறிவுரைகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய சுகாதார துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 14ம் தேதி வரை  21 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை செயல்படுத்தியது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து லாக்டவுனை மே 3ம் தேதி வரை மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.