இதுவரை ஆரோக்கிய சேது ஆப்பை 9.6 கோடி பேர் தரவிறக்கம்!

 

இதுவரை ஆரோக்கிய சேது ஆப்பை 9.6 கோடி பேர் தரவிறக்கம்!

தற்போது 9.6 கோடி பேர் இதனை தரவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களுக்கு தானே கொரோனா வைரஸ் இருக்கிறதா.. அல்லது அறிகுறி இருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்ள ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கியது.இதனை மத்திய,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கட்டாயமாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . 

ttn

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே லட்சக்கணக்கானோர் இதனை தரவிறக்கம் செய்து வந்த நிலையில், தற்போது 9.6 கோடி பேர் இதனை தரவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பற்றி பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, கொரோனா இருப்பதை கண்டறியும் இந்த செயலி மூலம் இதுவரை 650 கொரோனா இருக்கும் இடங்களும், 300 நோய்ப்பரவும் இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

அதுமட்டுமில்லாமல் இந்த செயலி மூலம் 69 மில்லியன் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என்றும் 34 லட்சம் பேர் தங்களுக்கு உடல்நலம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் இதில் பரிசோதனை செய்த 12,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.