இதுக்கு பேராடா புதிய பட்டு சாலை? சீனர்களின் ச்சீய் செய்கை

 

இதுக்கு பேராடா புதிய பட்டு சாலை? சீனர்களின் ச்சீய் செய்கை

சீனாவில் நெடுங்காலமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. ‘ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒண்ணு’ என்று இரண்டு குழந்தைகளுக்கு வழியில்லாத சீன பெற்றோர், ஆசைக்கும் ஆஸ்த்திகுமாக ஒரே ஒரு பிள்ளை, அது ஆண் பிள்ளையாக இருந்தால் போதும் என முடிவெடுத்து, பெண் குழந்தைகளை கருவிலேயே கலைக்க தொடங்கினர். விளைவு? இப்போது சீனாவில், மணமகள் தேவை விளமபரங்கள்தான் அதிகளவில் வருகிறதாம்.

பண்டைய ரோமர் காலத்தில் சீனாவில் இருந்து ஐரோப்பாவிற்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்டது பட்டு. சீன-ஐரோப்பிய சாலை பட்டுசாலை என்ற பெயரில் 68 நாடுகளில் இந்த திட்டத்தின்மூலம் போக்குவரத்து, துறைமுக வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த திட்டத்திற்கு இதுவரை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் முதல் ஆளாக “இது ஒரு புதிய விடியல்” என ஓவராக கூவி தன் எல்லையை சீனத்திற்கு அகல திறந்துவிட்டது. அந்த ஆபத்து இப்போது பாகிஸ்தான் ஏழைக்குடும்ப பெண்கள் தலையில் வந்து விடிந்திருக்கிறது.

Chinese marryinng Pakistani girl

சீனாவில் நெடுங்காலமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது.  ‘ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒண்ணு’ என்று இரண்டு குழந்தைகளுக்கு வழியில்லாத சீன பெற்றோர், ஆசைக்கும் ஆஸ்த்திகுமாக ஒரே ஒரு பிள்ளை, அது ஆண் பிள்ளையாக இருந்தால் போதும் என முடிவெடுத்து, பெண் குழந்தைகளை கருவிலேயே கலைக்க தொடங்கினர். விளைவு? இப்போது சீனாவில், மணமகள் தேவை விளமபரங்கள்தான் அதிகளவில் வருகிறதாம். மணமகன் தேவை என்ற விளம்பரத்தை பெண்ணின் குடும்பத்தார், விளம்பர ஏஜென்சிக்கு கொண்டுபோய் அது விளம்பரமாவதற்குள் அப்பெண்ணுக்கு மணமகன் கிடைத்துவிடுகிறாராம். வேறு வழியின்றி ஐயம் சிங்கிள் அன்ட் வெரி ஓல்டு என ஓல்ட் மங்க் அடித்து காலத்தை கடத்திவந்த சீன மணமகன்களுக்கு, அடித்தது ஜாக்பாட் பாகிஸ்தான் ஏஜென்ட்கள் மூலம்.

Chinese marrying poor Pakistani

பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்த்தவ மற்றும் முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம் சீன பையன்களை முறையே கிறிஸ்த்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் காட்டி, மணப்பெண்ணின் குடும்பத்திற்கு பணம்கொடுத்து திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு பட்டு சாலை வழியே பறந்திருக்கின்றனர். சரி, ஏழைக்குடும்பத்து பெண்களுக்கு வெளிநாட்டிலாவது வாழ்க்கை கிடைத்ததே என்று நிம்மதியடைய தேவையில்லை. சீனத்துக்கு மனைவியாக அழைத்துச்சென்று மசாலா கிளப்களில் வேலைக்கு சேர்த்துவிட்டும், பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

Rescued Pakistani Girl

கடந்த சில வாரங்களில் மட்டும் 150 பாகிஸ்தான் சிறுமிகள் (பெண்கள் அல்லர்) சீனாவுக்கு இதற்காக கடத்தப்பட்ட செய்தி வெளியாகி பாகிஸ்தானில் அதிர்வலைகளை உண்டுபண்ணியிருக்கிறது. அதிர்வலைகள் பாகிஸ்தானுக்கு புதிதல்ல. ராணுவம், மதம் என திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கு மாதம் மும்மாரி அதிர்வலைகள் பொழிவதால், இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. சப்பைமூக்கனுங்களை நம்பாதீங்கடான்னா, கேக்குறானுங்களா பங்காளிங்க‌?