இணையத்தை தெறிக்கவிடும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா டிக்கெட், டி.சர்ட்! 

 

இணையத்தை தெறிக்கவிடும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா டிக்கெட், டி.சர்ட்! 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என்று சன்டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர். 

Photos

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் விழாவிற்கான அழைப்பிதழ்கள், டி.சர்ட்  ஆகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.