இட ஒதுக்கீடு எனது மைல் கல்: பிரதமர் மோடி

 

இட ஒதுக்கீடு எனது மைல் கல்: பிரதமர் மோடி

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது எனது ஆட்சியின் மைல் கல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மும்பை: பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது எனது ஆட்சியின் மைல் கல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் எனது அரசு மசோதா தாக்கல் செய்து சுமுகமாக நிறைவேற்றி இருப்பது அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வரலாற்றில் ஒரு சாதனை சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் பொய்யை மட்டுமே பரப்புபவர்களுக்கு, இது சரியான பதிலடியாகவும் அமைந்துள்ளது. இந்த மசோதாவால் த லித்துகளோ அல்லது பழங்குடியின மக்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள்.

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை மக்கள் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட காலம் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அதேநேரம் காலம்காலமாக இங்கு பூர்வீகமாக வசிக்கும் மக்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.