இட்லி பாட்டியை வைத்து அரசியல்… ஸ்டாலின் பேசியதால் விழுந்தடித்து உதவி செய்த அ.தி.மு.க, பா.ஜ.க!

 

இட்லி பாட்டியை வைத்து அரசியல்… ஸ்டாலின் பேசியதால் விழுந்தடித்து உதவி செய்த அ.தி.மு.க, பா.ஜ.க!

கோவை இட்லி பாட்டியைத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகளும் அவரை சந்தித்து உதவி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இட்லி பாட்டியைத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகளும் அவரை சந்தித்து உதவி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் (85) சிறு வயது முதல் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். விலைவாசி என்னதான் உயர்ந்தாலும் ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருகிறார் கமலாத்தாள். இவரைப் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானது, இதனால் இந்தியா அளவில் புகழ் பெற்றார். இவருக்கு பலரும் உதவிகள் செய்து வந்தனர்.

idly-patti

இந்த நிலையில் தி.மு.க கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தைத் தொடங்கியது. ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவி செய்பவர்களை ஒன்று சேர்த்து தேவையானவர்களுக்கு உதவிகள் கிடைப்பதை இந்த அமைப்பு உறுதி செய்து வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை தி.மு.க நிர்வாகிகள் கமலாத்தாளை கடந்த சனிக்கிழமை சந்தித்து அவருக்கு உதவிகள் தேவையா என்று கேட்டறிந்தனர். மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேசவும் வைத்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு மளிகைப் பொருட்கள், நிதி உதவி செய்யப்பட்டது.

இதை அறிந்த அமைச்சர் ஒருவரின் சகோதரர் கமலாத்தாளை தொடர்புகொண்டு 50 கிலோ அரிசியும் ரூ.10 ஆயிரமும் வழங்கியது. அதை புகைப்படம் எடுத்து பப்ளிசிட்டியும் தேடிக்கொண்டது அ.தி.மு.க. தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் உதவி செய்த தகவல் பா.ஜ.க-வுக்கு தெரியவர அதுவும் தன் பங்குக்கு கமலாத்தாளை தொடர்புகொண்டு பேசி நிதி உதவி செய்தது. மேலும் சில அமைப்புகளும் உதவி செய்தன.

idli-patti-hlp

ஸ்டாலின் பேசிவிட்டார் என்று தெரிந்ததும் போட்டிப் போட்டுக்கொண்டு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதவி அரசியல் களத்தில் குதித்திருப்பதாக அந்தப் பகுதியில் பேச்சு நிலவுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக இட்லி தயாரிப்பு அளவை கமலாத்தாள் குறைத்துக் கொண்டாராம். 600 இட்லிகள் சுட்டுக்கொண்டிருந்த அவர் 400ஆக குறைத்திருந்தாராம். தற்போது அரசியல் கட்சிகள், அமைப்புகள் போட்டிப்போட்டுக்கொண்டு உதவி செய்துள்ளதால் மீண்டும் இட்லிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளாராம். யாரிடமும் உதவி கேட்க மாட்டேன், உதவி செய்தால் அதை மறுக்கவும் மாட்டேன் என்கிறார் கமலாததாள் பாட்டி.