இட்லிக்கு தொட்டுக்க  டீ..! என்ன காம்பினேஷன் இது…?

இட்லிக்கு தொட்டுக்க  டீ..! என்ன காம்பினேஷன் இது…?

எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை சாப்பிடுபவர்கள் அவர்களுக்கு பிடித்த வகையில்தான் சாப்பிட விரும்புவார்கள்.சிலருக்கு நல்ல காரமா இருக்கணும்,சிலருக்கு காரமே இருக்கக்கூடாது.இப்படி எவ்வளவோ சொல்லலாம். சிலர் சாப்பிடுவதற்கு தேர்ந்தெடுக்கும் சைட் டிஷ் ஆச்சர்யப்படவும் வைக்கும்.அந்த வகைதான் இந்த செய்தி.

பொதுவா இட்லியுடன் சைடு டிஷ்ஷாக என்ன சாப்பிடுவோம்? சாம்பார், சட்னி காரசட்னி தொடங்கி ஏகப்பட்ட ஐட்டம்த்தைச் சேர்த்துதானே சாப்பிடுவோம். ட்விட்டரில் வைரலாகிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்தால் நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்களோனு தெரியல! அப்படி என்னத்ததான் சைட்  டிஷ்ஷாக வைத்துச் சாப்டாங்கனு கேக்கறீங்களா? இட்லியுடன் டீ-யை வைத்து ஒருவர் சாப்பிடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது. 

ரெட்டிட் இந்தியா தங்களின் ட்விட்டர் அக்கவுண்ட்யில் ஒரு நபர் இட்டிலியை டீ-யில் நனைத்து சாப்பிடும் ஒரு சிறு கிளிப்பை பகிர்ந்துள்ளது.அது “ஹலோ,நான் இந்தியாவிற்கு புதிது,நான் இதை சரியாக செய்கிறேன் என்று நம்புகிறேன்” என்று பகிர்ந்துள்ளது. இதைப்பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை ட்வீட் செய்துள்ளனர்.பலர் இதைப்பார்த்து அதிர்ச்சியிலும்,முகம் சுளித்தும் கமெண்ட் செய்துள்ளனர்.

இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? இதே போல்,மாக்கியில் ஆரஞ்சுகளும், பிச்சாவில் குலாப் ஜாமுன் போன்ற மிகவும் வயிற்றை கலக்கும் விதத்தில் போஸ்டுகள்  ட்விட்டரில் வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.