இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை..!

 

இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கையில்  அதிமுக தொடர்ந்து முன்னிலை..!

நாங்குநேரியில் அதிமுக சார்பாக வெ. நாராயணனும், விக்கிரவாண்டியில் அதிமுக சார்பாக முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாங்குநேரியில் அதிமுக சார்பாக வெ. நாராயணனும், விக்கிரவாண்டியில் அதிமுக சார்பாக முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியதன் முதல் ஒரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Vote counting

வாக்கு எண்ணிக்கைகளின் தற்போதைய நிலவரம்:

விக்கிரவாண்டி தொகுதி

அதிமுக 75,885 வாக்குகளும், திமுக 46,297 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,890 வாக்குகளையும் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் அதிமுக 29,591 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 

நாங்குநேரி தொகுதி 

அதிமுக 33,385 வாக்குகளும், காங்கிரஸ் 21,328 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 578 வாக்குகளும் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக 12,057 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.