இடைத்தேர்தலை தள்ளி வைக்க அவசியமில்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

 

இடைத்தேர்தலை தள்ளி வைக்க அவசியமில்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்க அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

மதுரை: 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்க அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து மேல் முறையீட்டுக்கு செல்லமாட்டோம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என தினகரன் தரப்பு முடிவு செய்தது. இதற்கிடையே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 18 தொகுதிகளிலும் கடந்த முறை தேர்தல் நடத்துவதற்கு செலவான தொகையை தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களிடமும் வசூலிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.