இடைத்தேர்தலில் நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு சீட்! வியப்பில் ஆழ்த்திய பா.ஜ.க.

 

இடைத்தேர்தலில் நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு சீட்! வியப்பில் ஆழ்த்திய பா.ஜ.க.

உத்தர பிரதேச இடைத்தேர்தலில் கோசி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட நடைபாதை காய்கறி வியாபாரின் மகனுக்கு பா.ஜ.க. சீட் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில், தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 24ம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேச உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தலைமை நேற்று வெளியிட்டது. இதில் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும்  பா.ஜ.க. வேட்பாளர்கள் பெயரும் அடங்கும். 

பா.ஜ.க.

தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் அறிவிப்பது வழக்கம்தானே இதில் என்ன புதுசா இருக்குன்னு நினைப்பது சகஜம்தான். கட்சிகளால் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் தற்போது பா.ஜ.க. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு ஆச்சரியம் இருக்கு. என்னன்னா உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட நடைபாதை காய்கறி வியாபாரின் மகன் விஜய் ராஜ்பாருக்கு பா.ஜ.க. சீட் வழங்கியுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் விஜய் ராஜ்பார்

இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய் ராஜ்பார் இது குறித்து கூறுகையில், கட்சி எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. முனிஷ் புரா பகுதியில் நடைபாதையில் என்னுடைய அப்பா காய்கறி விற்பனை செய்து வருகிறார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என கூறினார். ராஜ்பாரின் தந்தை நந்த் லால் ராஜ்பார் இது குறித்து கூறுகையில், நான் காய்கறி விற்பனை செய்கிறேன். என்னுடைய மகனுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. அவனுடைய திறனை பார்த்து கட்சி சீட் வழங்கியுள்ளது. அது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.