இடைத்தேர்தலால் தப்பித்த ஓ.பி.எஸ்… எடப்பாடி போட்ட மாஸ்டர் ப்ளான் பணால்..!

 

இடைத்தேர்தலால் தப்பித்த ஓ.பி.எஸ்… எடப்பாடி போட்ட மாஸ்டர் ப்ளான் பணால்..!

செயற்குழு உறுப்பினர்களை தன் வசப்படுத்தி ஒற்றைத் தலைமையாய் தான் மட்டுமே இருக்க ஏற்பாடுகளை செய்ய இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் ஓ.பி.எஸை ஓரம் கட்ட முடிவு செய்து இருந்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடப்பதால் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட கால அவகாசம் வேண்டும் என்று ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் போதும் என்ற நினைப்பில் அதிமுக  இருக்கிறது.

ops

பொதுக்குழுவை கூட்டி செயற்குழு உறுப்பினர்களை தன் வசப்படுத்தி ஒற்றைத் தலைமையாய் தான் மட்டுமே இருக்க ஏற்பாடுகளை செய்ய இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் ஓ.பி.எஸை ஓரம் கட்ட முடிவு செய்து இருந்தார். 

ஆனால், இப்போது இடைத்தேர்தல் நடக்க இருக்கும்  இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக சீனியர் அமைச்சர்களும் பசை உள்ள அமைச்சர்களும் களத்தில் இறக்கிவிடப் போகிறார்கள். குறிப்பாக அதிமுக கடந்த இடைத்தேர்தலில் நியமித்த பொறுப்பாளர்களையே இந்த இரண்டு தொகுதிகளுக்கும் போடலாமா? என்று யோசித்து வருகிறது. ஆனால், கட்சிக்குள் உள்ள மற்ற கோஷ்டிகள் எங்கள் தொகுதிக்குள் இவர்கள் வரக்கூடாது.  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

eps

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இது விளையாட்டு அல்ல. வாழ்வா? சாவா? பிரச்னை. உங்கள் அதிருப்திகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ஜெயிக்கிற வேலையை பாருங்கள். வேற எதுவும் என்  காதுக்கு வரக்கூடாது. அதுவரை நான் சொல்றதை மட்டும் செய்யுங்கள் என்று அதிரடித்துள்ளார். அதை பார்த்த அதிருப்தி கோஷ்டி பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விட்டார்கள்.