‘இசைஞானி என் படத்திற்கு இசையமைத்திருப்பது என் பாக்கியம்’ : விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

 

‘இசைஞானி என்  படத்திற்கு இசையமைத்திருப்பது  என் பாக்கியம்’ : விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம்  தமிழரசன்.  ‘எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

ttn

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய  விஜய் ஆண்டனி, என் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.  ஒரு இசையமைப்பாளருக்கு மற்றொரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படம் இதுதான் என்று தெரிவித்தார். 

ttn

இந்த இசைவெளியிட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.