இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடலாம் – கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடலாம் – கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதலிரண்டு போட்டிகளை இங்கிலாந்தும், 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ஆம் தேதி சவுதாம்டனில் நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில், , 3-வது டெஸ்ட் போட்டி வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில், “இது எங்களுக்கு முழுமையான டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். அதை களத்தில் செய்து காட்டினோம். அதன் பின் பந்து வீச்சாளர்கள் தங்களது பணியையும் கச்சிதமாக செய்தனர்.

பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தனர். ஸ்லிப் பகுதியில் கேட்சுகளை துல்லியமாக பிடித்ததால் இப்போட்டியில் வெற்றி பெற்றோம். டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறோம். 0-2 என்ற கணக்கில் இருந்து 3-2 என்ற கணக்கில் தொடரில் வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறார்” என்று கூறினார்.