ஆஸ்த்திரேலிய காட்டுத்தீ… தினம் 1000 பேருக்கு உணவளிக்கும் சீக்கியப் பெண்மணி!

 

ஆஸ்த்திரேலிய காட்டுத்தீ… தினம் 1000 பேருக்கு உணவளிக்கும் சீக்கியப் பெண்மணி!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிப்பவர் சுக்வீந்த்தர் சிங் கவுர்.35 வயதான கவுரின் சகோதரி இந்தியாவில் வசிக்கிறார்.அவரை போய் பார்ப்பதற்காக கவுர் தயாராகிக் கொண்டு இருக்கும் போதுதான் ஆஸ்த்திரேலிய காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேர்ந்தது.அதில் கிழக்கு ஜிப்ஸ்லாண்ட் பகுதியைச் சேர்ந்த 1000 பேர் கவுர் வசிக்கும் பகுதிக்கு கொண்டுவந்து தங்கவைக்கபட்டனர். ‘இந்தியாவில் இருக்கும் என் சகோதரியைப் போய் பார்க்க வேண்டியது முக்கியம்தான்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிப்பவர் சுக்வீந்த்தர் சிங் கவுர்.35 வயதான கவுரின் சகோதரி இந்தியாவில் வசிக்கிறார்.அவரை போய் பார்ப்பதற்காக கவுர் தயாராகிக் கொண்டு இருக்கும் போதுதான் ஆஸ்த்திரேலிய காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேர்ந்தது.

அதில் கிழக்கு ஜிப்ஸ்லாண்ட் பகுதியைச் சேர்ந்த 1000 பேர் கவுர் வசிக்கும் பகுதிக்கு கொண்டுவந்து தங்கவைக்கபட்டனர். ‘இந்தியாவில் இருக்கும் என் சகோதரியைப் போய் பார்க்க வேண்டியது முக்கியம்தான்.ஆனால் எனது கடினமான நாட்களின்போது எனக்கு உதவி, என் வளர்சிக்கு காரணமாக இருந்த இந்த மக்களும்,சமுதாயமும் கூட எனது குடும்பம்தான்.இவர்கள் துண்பத்தில் இருக்கும்போது இவர்களை விட்டு என்னால் எப்படி போக முடியும் ‘ என்று சொல்லும் சுக்வீந்தர் சிங் கவுர் அங்கேயே தங்கிவிட்டது மட்டுமல்ல தினந்தோறும் 1000 பேருக்கு உணவளித்து வருகிறார். 

australlia

அதுவும் புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு முதல்நாளும் கவுர் உறக்கமே இல்லாமல் இரவு பகலாக உணவு தயாரித்து வழங்கி இருக்கிறார்.அதுபற்றி கேட்டால் ‘ கொஞ்சம் கூட வீணாகாமல்  சமைத்தது மொத்தத்தையும் மக்கள் உண்டு தீர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ‘ என்கிறார் கவுர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

ஆஸ்த்திரேலிய’  சீக் வாலண்டியர்ஸ் ‘ அமைப்பு சுக்வீந்தர் சிங் கவுர் பற்றித் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நிலைத்தகவலிட அது ஆஸ்த்திரேலியாவெங்கும் காட்டுத்தீக்கு போட்டியாக பரவி வருகிறது.