ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் யோகாசனம் 

 

ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் யோகாசனம் 

பொதுவாக குளிர்ச்சியான சூழலின் போது ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆஸ்துமாவின்  ஆரம்ப கால அறிகுறிகள்  தும்மல், அமைதியின்மை, கோபம், எரிச்சல் ஆகியவையே! இரவு படுக்கைக்கு செல்லும் போது அமைதியாக வே இருந்தாலும் திடீரென மூச்சு இரைக்க தொடங்கிவிடும். இருமலோ, சளியுடன் கூடிய இருமலோ தொடர ஆரம்பிக்கும்.

பொதுவாக குளிர்ச்சியான சூழலின் போது ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆஸ்துமாவின்  ஆரம்ப கால அறிகுறிகள்  தும்மல், அமைதியின்மை, கோபம், எரிச்சல் ஆகியவையே! இரவு படுக்கைக்கு செல்லும் போது அமைதியாக வே இருந்தாலும் திடீரென மூச்சு இரைக்க தொடங்கிவிடும். இருமலோ, சளியுடன் கூடிய இருமலோ தொடர ஆரம்பிக்கும்.

asthma

தொண்டை மற்றும்  நெஞ்சுக்குழிக்குள் ‘கொய்ங்….கொய்ங்க்….’ என்ற சத்தத்துடன்  மூச்சு ஏறி, இறங்குவதுமாக இருக்கும். 
 ஆஸ்துமா நோய்க்கு இன்றைய அலோபதி மருத்துவத்தில் பலவகையான மருந்துகள் பயன் பாட்டில் இருந்தாலும், வரும் முன் காத்தல் எல்லா நோய்க்கும் பொதுவான விதி. அதன் படி சில யோக கலையின் மூலமாக ஆயுளுக்கும் நம்மை ஆஸ்துமா எட்டிப் பார்க்காத மாதிரி ஆரோக்கியமாக இருக்கலாம். 

asthma

உஷ்ட்ராசனம்(ஒட்டக இருக்கை)
முழங்கால் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்த படியே மூச்சினை வெளியில் விட்டுக்கொண்டு கைகள் இரண்டையும் பின்புறமாக நீட்டி குதிகால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தொடைகளும், கைகளும் செங்குத்தாக இருக்க  இடுப்பு வில் போன்று வளைய, மார்பு விரிந்த நிலையை அடையும். முதன் முதலில் பழகும் நாட்களில் ஐந்து முதல் பத்து மணி துளிகள் இருந்து விட்டு கைகளை விடுவித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்து கொள்ளலாம். இந்த நிலையில் உட்கார ஓரளவு பயிற்சி பெற்றதும் மூச்சினை மூக்கினால் ஆழமாக இழுத்துவிடவும். 15 முதல் 20தடவைகள் செய்ய வேண்டும்.

ustrasana

மத்ஸ்யாசனம்
சிறிது நேரம் மல்லாக்கப் படுத்துக் கொள்ளவும். சிறிது ஓய்வுக்குப் பின் இரண்டு முழங்கைகளையும் மடக்கி உள்ளங்கைகளை செவிப்புறம் தரையில் அழுத்தியும் கழுத்தை பின்புறமாக மடக்கியும் தலையை  தரையில் படுமாறு செய்யவேண்டும். ஊன்றிய கைகளை மெதுவாக நகர்த்தி தொடை மீது எடுத்து வரவேண்டும். சுவாசத்தை மெல்ல இழுத்து வெளியே விடவேண்டும். 10லிருந்து 15 தடவைகளுக்கு செய்த பின் மீண்டும் கழுத்தை தரையில் படுமாறு வைக்கவேண்டும். 

matsyasana

இந்த ஆசனங்களை முறைப்படி செய்து வந்தால் விரைவிலேயே ஆஸ்துமாவிலிருந்து நிரந்தரமாக குணமடையலாம். புதிதாக செய்பவர்கள் தகுந்த வழிகாட்டியின் உதவியுடன் பயிற்சியைத் துவங்கலாம்.