ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: 4 ரன்களில் வீழ்ந்தது இந்தியா

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: 4 ரன்களில் வீழ்ந்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வீழ்ந்தது

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வீழ்ந்தது.

டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ஃபின்ச் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். அந்த அணியின் ஸ்கோர் 24 ஆக இருந்த போது,  கலீல் அஹ்மத் வீசிய முதல் பந்திலேயே டேர்சி ஷார்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 27 ரன்களிலும், க்ரிஸ் லின் 37 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார்.

ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு  16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதை தொடர்ந்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப்பின் துவங்கிய போட்டி தலா 17 ஓவராக மாற்றப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் மேக்ஸ்வெல் (46) அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.

அதன்பின்னர், ‘டக் வொர்த் லீவிஸ்’ விதிப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா 7 ரன்களில் வெளியேற தவான் அதிரடி காட்டினார். ஆனால், எதிரே ஆடிய லோகேஷ் ராகுல், கேப்டன் கோலி அடுத்தடுத்து வெளியினர். அரசி சதம் கடந்த தவான் (76) ஸ்டான்லேக் பந்தில் அவுட்டானார். இறுதியாக, இந்திய அணி 17 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டும் எடுத்து நான்கு ரன்களில் வீழ்ந்தது.