ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத்தீ ; உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மிருகங்கள் மீட்பு… மனதை நெகிழவைக்கும் புகைப்படங்கள்!

ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத்தீ ; உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மிருகங்கள் மீட்பு… மனதை நெகிழவைக்கும் புகைப்படங்கள்!

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.அதை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு தீ அணைப்பு வீரர்கள் தொடங்கி பல்வேறு தரப்பிலும் முயற்சிஎடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீயில் பல மில்லியன் விலங்குகளும்,உயிரினங்களும் தங்கள் உயிரை இழந்துள்ளன..பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தும் விலங்குகளை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து உதவுகின்றனர். 

autralia

இந்த தீ கடந்த சில மாதங்களாக எரிந்து கொண்டுவரும் நிலையில் பல உயிர்கள் இழந்த கோர சம்பவத்தால் பலரும் தங்கள் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும்,இந்த சம்பவத்தில் சற்று மனதை தேற்றும் விதமாக காப்பாற்றப்பட்ட கோலா கரடிகள் மற்றும் கங்காருவின் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன அவை பார்ப்போரின் மனங்களை சற்று அமைதிப்படுத்தியும்,நெகிழவைத்தும் உள்ளன.

அந்த புகைப்படங்களில் கோலா கரடிகள் தீயணைப்பு வீரர்களைப்பார்த்த உடனே அவர்களை கட்டி தழுவிக்கொண்ட காட்சி மனதை நெகிழவைக்கிறது. கரடிகள் தங்களை காப்பாற்றுங்கள் என கூறுவது போலவும், வீராங்களைப்பார்த்து ஒரு நம்பிக்கை கொண்ட உணர்வு வெளிப்பட்டது.

austalia

மேலும்,காப்பாற்றும் நோக்கில் கங்காரு மீது ஒரு சிறுவன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் புகைப்படம்,பெண் ஒருவர் கோலா கரடிகளை காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்து, தான் அணிந்திருந்த மேற்சட்டையை கரடியின் மீது போர்த்திய புகைப்படம் அனைவராலும் பாராட்டுக்குள்ளானது.மேலும் அந்தப்பெண் கரடிக்கு தண்ணீர் வழங்கி மருத்துவமனையிலும் அனுமதித்தார். அந்த கரடி காப்பற்றப்படவில்லையெனாலும் அவரின் அந்த வீர செயல் இன்னும் அனைவரது மனங்களில் ஆழ்ந்து பதிந்துள்ளது.

காப்பாற்றப்பட்ட கங்காரு குட்டி டயபர் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காயங்கள் உள்ளதால் அவைகளுக்கு டயபர் போன்று ஆடைகள் போர்த்தப்பட்டுள்ளது.

australia

பலர் தங்கள் உதவி கரங்களை இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக நீட்டி வருகின்றனர்,இப்போது வெளியிடப்பட்ட காப்பாற்றப்பட்ட விலங்குகளின் புகைப்படங்கள் மனதிற்கு சற்று நம்பிக்கையையும்,ஆறுதலையும் அளிக்கும்விதமாக அமைந்துள்ளது.