ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தெறிந்து புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி!!

ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தெறிந்து புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி!!

உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 300+ ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 300+ ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், வங்கதேச அணியும் மோதி வருகின்றன. 
இங்கிலாந்தின் கார்டிஃபில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் 153 ரன்களும், பாரிஸ்டோவ் 51 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பின்வரிசையில் வந்த வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 386 ரன்கள் எடுத்தது. 

engalnd

இன்றைய போட்டியில் 300 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 முறை 300+ ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 300+ ரன்கள் எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக தொடர்ச்சியாக 6 முறை 300+ ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி வைத்திருந்த இந்த சாதனையை தற்பொழுது இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.