ஆஸ்கர் விருது வென்ற ‘பாராசைட்’ படத்தை பற்றி அதிகமாக தேடல் – கூகுள் அறிவிப்பு

 

ஆஸ்கர் விருது வென்ற ‘பாராசைட்’ படத்தை பற்றி அதிகமாக தேடல் – கூகுள் அறிவிப்பு

இந்தாண்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘பாராசைட்’ திரைப்படம் வென்றதை தொடர்ந்து அப்படத்தை பற்றி கூகுளில் ஏராளமானோர் தேடியுள்ளனர்.

டெல்லி: இந்தாண்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘பாராசைட்’ திரைப்படம் வென்றதை தொடர்ந்து அப்படத்தை பற்றி கூகுளில் ஏராளமானோர் தேடியுள்ளனர்.

இந்தாண்டு நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம் பிரிவில் தென்கொரிய பிளாக் காமெடி படமான ‘பாராசைட்’ விருதை வென்றது. இதையடுத்து இந்த படத்தைப் பற்றி கூகுள் தேடல் உடனடியாக அதிகரித்துள்ளது. உலகில் ஏராளமானோர் அந்தப் படத்தைப் பற்றி அறிந்து கொள்ள கூகுள் உதவியை நாடியுள்ளனர். இதனால் பாராசைட் படத்தைப் பற்றிய கூகுள் தேடல் சுமார் எட்டு மடங்கு (857 சதவீதம்) அதிகரித்துள்ளது.

ttn

இதன் காரணமாக கூகுளில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட படம் என்ற பெருமையை ‘பாராசைட்’ திரைப்படம் பெற்றுள்ளது. இத்தகவலை கூகுள் நிறுவனம் தனது பிளாக் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான புள்ளிவிபர புகைப்படத்தையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ‘1917’ படத்தை விட மிக அதிகமாக பாராசைட் படத்தை தான் உலக மக்கள் தேடியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. பாராசைட் படத்தை பாங் ஜூன் ஹோ இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயரும் கூகுளில் அதிகமாக தேடல் நிகழ்த்தப்பட்டுள்ளது.