ஆஸி.,XI அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

 

ஆஸி.,XI அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கெதிரன பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரண்கள் எடுத்து ஆட்டமிழந்தது

-குமரன் குமணன்

 

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கெதிரன பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரண்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் காலையில் இருந்தே மழை கொட்டி தீர்த்ததால், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் சிறிது நேரத்திலேயே 3 ரண்களில் வெளியேறிய போதும் மறுமுனையில் பிரித்வி ஷா அதிரடி காட்டினார். 19 வயதான ஷா, சில நாட்களுக்கு முன்னர் தேசிய அணியில் அறிமுகமாகி தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்தர்.

தொடர்ந்து, வெளிநாட்டு மண்ணில் களமிறங்க கிடைத்த முதல் வாய்ப்பிலும் மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷா, அணியின் ஸ்கோர் 96-ஆக இருந்த போது, 69 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வந்த புஜாராவும் விராட் கோலியும் முறையே 54 (89 பந்துகளில் 6 புவுண்டரிகள்) மற்றும் 64 ரண்கள் (87 பந்துகளில் 7 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தனர். சமீபத்திய வெளிநாட்டு தொடர்களில் ரண் குவிக்க தடுமாறி வரும் ரஹானே 54 ரண்கள் எடுத்திருந்த போது மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் “ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ரோஹித் ஷர்மா 40 ரண்களில் வெளியேறினார். இறுதியாக, முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 358 ரண்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய வாரிய அணி தரப்பில் இன்னும் தேசிய சீனியர் அணிக்கு தேர்வாகாத ஆரோன் ஹார்டி எனும் வேகப்பந்து வீச்சாளர், 13 ஓவர்களில் 50 ரண்கள் கொடுத்து , கோலி ,ரோஹித் ஷர்மா உட்பட நான்கு பேரின் விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஆட்ட நேரம் முடியும் தருவாயில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வாரிய தொடக்க வீரர்கள் மேக்ஸ் பிரையன்ட் மற்றும் டார்ஸி ஷார்ட் ஆகியோர் முறையே 10 மற்றும் 14 ரண்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 24 ரண்களுக்கு கொண்டுவந்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.