ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய புத்துணர்வை அளிக்கிறது: கங்குலி புகழாரம்

ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய புத்துணர்வை அளிக்கிறது: கங்குலி புகழாரம்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய புத்துணர்வையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய புத்துணர்வை அளிக்கிறது: கங்குலி புகழாரம்

டி20 போட்டிகள் கிரிக்கெட் உலகிற்கு வந்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் மீது ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய புத்துணர்வையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

டி20 போட்டிகள் கிரிக்கெட் உலகிற்கு வந்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் மீது ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளே பிரதானமாக இடம் பெறுகின்றன. டெஸ்ட் போட்டிகளுக்கு போதிய ஈடுபாடு அளிப்பதில்லை. 

ஆனால், பாரம்பரியமாக பின்பற்றிவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எக்காரணம் கொண்டும் பாரம்பரியத்தில் இருந்து மாறாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைக்க உதவுகிறது. மேலும் ரசிகர்கள் இடையே இருக்கும் குறைந்தபட்ச ஆர்வத்தையும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் காப்பாற்றி வருகிறது.

மேலும் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் என புதிய தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தி டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருவது மிகுந்த வரவேற்பு அளிக்கிறது.

இதன்மூலம் உண்மையான கிரிக்கெட் யாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வர். தனிப்பட்ட வீரனின் முழு திறமையை வெளிப்படுத்த டெஸ்ட் போட்டிகளே சரியான ஆட்டம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

இதேபோல், பிசிசிஐ டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய வீரர்களை தயார் செய்ய பல புதிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரஞ்சி கோப்பையில் புதிய கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்.