‘ஆவின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலோடு ஆவின் பாலும் சேர்க்கிறது’ நடிகை கஸ்தூரி வரவேற்பு!

 

‘ஆவின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலோடு  ஆவின் பாலும் சேர்க்கிறது’ நடிகை கஸ்தூரி வரவேற்பு!

நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான்  திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன்

பாஜகவின் மாநில நிர்வாகி நிர்மல் குமார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் திருக்குறளை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு தருவதன் மூலம் திருக்குறளை ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்று கோரிக்கை விடுத்தார்.

aavin

அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், மிகவிரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என்று  உறுதி கூறினார். 

kasturi

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும் .  டிவி , FM ரேடியோவில்  தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இவரது பதிவுக்கு பால் கவரை  கடைசியில் குப்பையில் தானே போட போகிறோம் என்று ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, ‘பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான்  திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி  குறள் வருவது நல்ல விஷயம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.