ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பது எப்படி? அரசு பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பது எப்படி? அரசு பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ஆழ்துளை விழுந்த குழந்தையை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் பலரும் தங்களுக்கு தெரிந்த முறைகளை தெரிவித்து வருகின்றனர்.

சீர்காழி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறையை கண்டுபிடித்து அரசு பள்ளி மாணவி அசத்தியுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் 5 நாட்கள்  போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். குழந்தையை  மீட்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை பேருக்கும் சுஜித்தின் மரணம் மீளா துயரை தந்துள்ளது.  இதையடுத்து  பயன் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட பலவேறு தரப்பிலிருந்து  முயற்சிகள் நடந்து வருகிறது. அதேபோல் ஆழ்துளை விழுந்த குழந்தையை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் பலரும் தங்களுக்கு தெரிந்த முறைகளை தெரிவித்து வருகின்றனர்.

sujith

அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த பக்கீர் முகமது என்பவரின்  மகள் சமீரா ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறையை கண்டுபிடித்துள்ளார். அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் வீட்டில் உள்ள பயனற்ற பொருட்களை வைத்து இந்த முறையை கண்டுபிடித்துள்ளார். 

borewell

முதலில்  குழந்தையின் பக்கவாட்டு பகுதியின் வழியே  இரு காந்தங்களை அனுப்பி அதை   ஒன்றிணைக்க வேண்டும். பின்னர் ஒருபுறமாகக் காந்தத்தை மேல் நோக்கி இழுத்து, அதன் ஒருமுனையில் பட்டையான கயிறை விட்டு மறுமுனைக்கு அதை இழுக்க வேண்டும். அப்படி இழுக்கும் போது, குழந்தை அமர்ந்த நிலைக்கு வரும். அப்படி இருக்கும் நிலையில் லாவகமாக குழந்தையைத் தூக்கலாம் என்று என்று கூறுகிறார் மாணவி சமீரா. இதை இன்னும் சிறந்த முறையில் செயல்படுத்த 1000 ரூபாய் செலவாகும் என்று கூறும் மாணவி சமீராவின் இந்த முயற்சியை அப்பகுதிவாசிகள் பாராட்டி மகிழ்கின்றனர்.