ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி..சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஏசி மெக்கானிக் கைது!

 

ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி..சொகுசு வாழ்க்கை  வாழ்ந்து வந்த ஏசி மெக்கானிக் கைது!

அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் யார் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அமெரிக்காவில் வசித்து வரும் சரஸ்வதி  திருநீர்மலையில் தான் வாங்கிய  ஒன்றரை கோடி மதிப்பு கொண்ட நிலத்தை யாரோ 2018 இல் முறைகேடாக விற்பனை செய்து விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதேபோல்  பெங்களூரைச் சேர்ந்த சுனிஜித் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் பல்லாவரத்தில் தான் வாங்கிய 1 கோடி மதிப்பு கொண்ட நிலத்தை முறைகேடாக 2010ஆம்  ஆண்டில்  யாரோ விற்பனை செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

ttn

தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் நிலமோசடி புகாரின்  பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சரஸ்வதி, சுனிஜித் மாதிரி ஆள்மாறாட்டம் செய்து அவர்களின் நிலத்தை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இது தொடர்பாக  ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் உரிமையாளர் போல ஆள்மாறாட்டம் செய்த நபர்களை தேடி வருகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத சுரேஷ், ஏசி மெக்கானிக்காக  இருந்து கொண்டே பல கோடி ரூபாய் மோசடி செய்து சொகுசு வாழ்க்கை  வாழ்ந்து வந்துள்ளார். 

 இதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சுரேஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை இவர்கள் எத்தனை  நிலங்களை இவ்வாறு மோசடி செய்துள்ளனர். இதில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் யார் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.