ஆளைவிடுங்கடா சாமி… வேல்முருகனை விரட்டியடித்த நெல்லை கண்ணன்..!

 

ஆளைவிடுங்கடா சாமி… வேல்முருகனை விரட்டியடித்த நெல்லை கண்ணன்..!

அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்றும் கூறிவிட்டு ஆள விடுங்கடா சாமி என்று கதறி இருக்கிறார்.

நெல்லை கண்ணன் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவரைக் காண தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் நெல்லை கண்ணன் வீட்டிற்கு தனித்தனி கார்களில் போய் சென்று சந்தித்திருக்கிறார்கள்.

கூடவே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணும் சென்று இருந்தார். அப்போதுதான் அந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது ’நீங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ என்று அவரை மூளைச் சலவை செய்து இருக்கிறார்கள். அப்போது நெல்லை கண்ணன், வேல்முருகன் முகத்தை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ’நிபந்தனை ஜாமினில் இருக்கும்போது இது தேவையில்லை. அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்றும் கூறிவிட்டு ஆள விடுங்கடா சாமி என்று கதறி இருக்கிறார்.

nellai kannan

அதன்பிறகு வேல்முருகன் குழுவினர் கண்ணனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு என்ன உதவி வேண்டும் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு விடைபெற்று இருக்கிறார்கள். நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில், ’ஐயா நான் மோடி- அமித்ஷா இருவரையும் அரசியலிலிருந்து தோற்கடிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் சோலியை முடிங்க’ என்று கூறினேன். 

மற்றபடி கொலையை குறிப்பிடவில்லை. என் வயதில் என்னால் சிறையில் இருக்க முடியாது நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும்’ என்று கூறியே நிபந்தனை ஜாமீன் பெற்றார். நெல்லை கண்ணனை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க அணுகியபோது ’சொல்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டு அமைதியாகி விடுகிறாராம்.