“ஆளில்லா போர் விமான சோதனை” அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ரஷ்யா!!!

 

“ஆளில்லா போர் விமான சோதனை” அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ரஷ்யா!!!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறார். 

“ஆளில்லா போர் விமான சோதனை” அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ரஷ்யா!!!

ஆளில்லா போர் விமான சோதனை ஒன்றை நடத்தி அமெரிக்க அரசின் இராணுவத்தை ரஷ்யா நாடு நடுங்க வைத்துள்ளது.

ஒவ்வொரு நாடும் தங்களது அண்டை நாடுகள் மற்றும் எதிரி நாடுகளை அச்சுறுத்தலுடனும் அடங்கிப்போக வைக்கவும் ராணுவத்தில் பல முன்னேற்றங்களை செய்து வருகிறது. அவற்றில் ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். 

உலகில் பலமிக்க நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா, தங்களது ராணுவத்திற்கு பல பிரத்தியேக ஏற்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறார். 

இதற்கு முன்னதாக, அணு ஆயுதங்கள், ஒலியை விட 5 மடங்கு மிக விரைவாக சென்று எதிரிகளைத் தாக்கும் “ஹைபர்சோனிக்” வகை ஏவுகணைகளை தயாரித்து அதன் சோதனையிலும் வெற்றி கண்டு தங்களது ராணுவத்தில் இணைத்து உள்ளது ரஷ்யா. 

தற்போது இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஆள்ளில்லா போர் மற்றும் உளவு பார்க்கும் விமானங்களை தயாரித்து வருவதில் ரஷ்ய ராணுவம் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சியில் இறங்கி படிப்படியாக வெற்றிகளைக் கண்டு வருகிறது. “ஓகோட்னிக்” எனப்படும் இந்த ஆளில்லா போர் மற்றும் உளவு விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான சுகோய் நிறுவனத்திற்கு வழங்கியது.

ஏறக்குறைய, 20 டன் எடை வரை வெடிபொருளைச் எந்திக் கொண்டு, சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஓகோட்னிக் வகை விமானங்கள். இந்த விமானத்தின் இறக்கைகள் 50 அடி நீளம் கொண்டது. இதில் ஒற்றை வகை ஜெட் இன்ஜின் பொறுத்தப்பட்டது. 

இந்த வகை விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 620 மைல் தூரம் செல்லக் கூடியது. இந்த விமானத்திற்கான சோதனை ஓட்டத்தையும் உளவு ஏற்பாடுகள் குறித்த சோதனையும் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா செய்து பார்த்தது. 

இந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் இதன் மூலம் ரஷ்ய அரசு ராணுவத்தின் பலம் மேலும் உயரும் என்றும் அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்திருந்தார். இந்த சோதனைக்கான வீடியோ காட்சிகளும் ஒரிரு தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர் அமெரிக்க ராணுவம் பி-2 வகை ஆளில்லா போர் விமானங்களை சோதனையிட்டு வெற்றி பெற்றுள்ளது. அந்த வகை விமானம் சுமார் 3100 மைல் தூரம் வரை சென்று திரும்பும் திறன் படைத்ததாகும். தற்போது இதற்கும் அதிகமான திறன் கொண்ட போர் விமானத்தை ரஷ்ய அரசு தயாரித்து வெற்றி கண்டிருப்பது அமெரிக்காவை நடுநடுங்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.