ஆல்யா மானஸா வளைகாப்பு…வைரல் வீடியோ!

 

ஆல்யா மானஸா வளைகாப்பு…வைரல் வீடியோ!

ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர்.

TTN

அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

TTN

இதையடுத்து இந்த ஜோடி கடந்த மே  மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது.  ஆல்யாவின்  வீட்டில் சஞ்சீவ்  இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இந்த ஜோடி அவசர கல்யாணம் செய்து கொண்டதாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்கள்.

ttn

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ்   ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.  

இந்நிலையில் ஆல்யா மானஸா வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ள சஞ்சீவ் , ‘இந்த நாளை மறக்கமாட்டேன், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.