ஆலயங்களில் தரும் பிரசாதங்களை வாங்கினால் பாவம் சேருமா?

ஆலயங்களில் தரும் பிரசாதங்களை வாங்கினால் பாவம் சேருமா?

நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போது,நிறைய பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் ‘பால் சர்க்கரைப் பொங்கல்’ என்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதைப் பார்த்திருப்போம்.சிலர் தங்களது வேண்டுதலுக்கு செவி சாய்த்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அவர்களது சந்தோஷத்தை கோயிலுக்கு வரும் பக்தர்களுடன் இப்படி பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

prasatham

இந்து மதம் ஆன்மிகத்தோடு பொதுநலனையும் இப்படி ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும் இணைத்தே கடவுளைக் கொண்டாடி வந்திருக்கிறது.பிரசாதம் என்பதை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பொருளாகத் தான் பார்க்க வேண்டும். நம் வீட்டிலிருந்து உணவுப் பொருட்களை சமைத்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அப்படியே நாம் பிரசாதமாகத் தருவதில்லை. 

அம்மன் கோயில்களில் பார்த்திருக்கலாம்… அம்மனுக்கு பொங்கலிட்டு, படைத்து,அதன் பின் தான் பிரசாதமாகத் தருகிறோம்.கடவுளுக்கு நைவேத்தியம் செய்து தரும் போது,அந்த உணவுப் பொருள்  தூய்மையான பிரசாதமாக மாறிவிடுகிறது.அப்படியான பிரசாதங்களை வாங்கும் பொழுது அது பாவமாக கருதப்படாது.

prasatham

ஆனால், பிரசாதத்தை வாங்கும் முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வோர் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும்,பெருமாள் கோவில்களில்  துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும். ஒருவர் தீர்த்தம் வாங்கி, இன்னொருவரின் கைகளில் இடுவது தவறாகும். 

அதே போல பொங்கல்,புளியோதரை போன்ற பிரசாதங்களை வாங்கும் பொழுது சிலர், கைகளில் இருக்கும் பிரசாதத்தை அப்படியே வாயினால் கடித்து சாப்பிடுவதை வழக்கமாக்கி வைத்திருப்பார்கள்.இதுவும் தவறு.வலது கையில் பிரசாதம் வாங்கி, இடது கையில் வைத்து, வலது கையினால் தான் எடுத்து சாப்பிட வேண்டும். 

prasatham

நமது உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். இது தெரியாமல், கைகளால் சாப்பிடத் தெரியாத ஒரு தலைமுறையை ஸ்பூன் கலாசாரத்திற்கு பழக்கப்படுத்தி வருகிறோம்.ஆன்மிகத்தோடு ஆரோக்கியத்தையும் சேர்த்தே பெரியவர்கள் கற்றுத் தந்தார்கள். அள்ளி இறைத்து சாப்பிடுகிற குழந்தைகள், நாள் ஆக ஆக சரியான உணவு முறைக்குப் பழகி விடுகிறார்கள். 
குழந்தைகளை அவர்களாகவே கைகளால் எடுத்து சாப்பிட பழக்கி வாருங்கள். உணவு ருசியும், சத்தும் அப்பொழுது தான் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.