ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாக கருதப்படும் ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபாடு செய்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார ஸதலமாக இக்கோயில் விளங்குகிறது. 
 
இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு இடம் பெயர்ந்தார். குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 3 மணி முதல் இக்கோயிலில் குரு பரிகார யாக பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உற்சவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. 

guru temple

அதனை தொடர்ந்து உற்சவர் தட்சிணாமூர்த்தி குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் எழுந்தருளினார்.அதன் தொடர்ச்சியாக இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில், தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று குருபகவானை வழிபாடு செய்ததுடன் பரிகார பூஜைகளும் செய்து வழிபாடு செய்தனர்.

alangudihks

ஆலங்குடியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்த வண்ணம் இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் விழாவில் கலந்து கொண்டு குருபகவானை வழிபாடு செய்தனர். குருப்பெயர்ச்சியை தொடர்ந்து 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா வருகின்ற 8-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.